×

பாராளுமன்ற தேர்தலில் 300 இடங்களுக்கு மேல் பெற்று பாஜ மீண்டும் ஆட்சி அமைக்கும் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி

நாகர்கோவில், பிப். 26: மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நேற்று நாகர்கோவிலில் நிருபர்களிடம் கூறியதாவது: மோடி பிரதமர் பொறுப்பேற்றதில் இருந்து மாதத்தின் கிடைசி ஞாயிற்று கிழமை ‘மனதின் குரல்’ எனும் பொருள்படும் ‘மன் கி பாத்’ வானொலியில் உரையாடும் நிகழ்ச்சியில் பேசி வந்தார். அவர் நேற்று முன்தினம் மனதின் குரல் நிகழ்ச்சியை நிறைவு செய்தார். பிரதமராக மீண்டும் பொறுப்பேற்று, மன் கி பாத் நிகழ்ச்சியில் மீண்டும் கலந்து கொண்டு பேசுவேன் என அறிவித்தார். நாட்டில் மக்கள் நலன்கருதி என்ன செய்தோம், செய்யலாம், செய்ய போவது குறித்து கோடிக்கணக்கான மக்களின் கருத்து கேட்கப்பட்டது. இந்நிலையில் பிரதமர் மோடி மக்கள் கருத்தை அறிவதற்காக ‘உங்கள் யோசனைகளை எனக்கு தெரிவியுங்கள்’ என்ற ‘பாரத் கெ, மன் கி பாத், மோடி கெ சாத்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இதில் கடிதம் மூலம் மக்கள் ஆலோசனை தெரிவிக்க கூறியுள்ளார். அதன் அடிப்படையில் வைக்கப்பட்டுள்ள பெட்டிகளில் கருத்து எழுதும் படிவங்களில் ஆலோசனைகளை எழுதி போடலாம். இதை டெல்லிக்கு கொண்டு சென்று மக்கள் என்ன விரும்புகிறார்கள். என்பதை அறிந்து இனிவரும் காலங்களில் செயல்பட முடியும். அதை மையமாக கொண்டு ேதர்தல் அறிக்கை தயாரிக்கப்படும்.

குமரி மாவட்டத்தில் மொத்தம் 8 இடங்களில் இந்த பெட்டி வைக்கப்படும். கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் ஆரல்வாய்மொழி, ஈத்தாமொழி ஆகிய இடத்திகளிலும், நாகர்கோவில் தொகுதியில் வேப்பமூடு, வடசேரி, குளச்சல் தொகுதியில் திங்கள்நகர், பத்மநாபபுரம் தொகுதியில் தக்கலை, கிள்ளியூர் தொகுதியில் புதுக்கடை, விளவங்கோடு தொகுதியில் குழித்துறை ஆகிய இடங்களில் இந்த பெட்டிகள் வைக்கப்படும். மக்கள் தங்கள் கருத்துகளை தேர்தல் தேதி அறிவிக்கும் வரை தெரிவிக்கலாம். தேர்தல் அறிவித்தபிறகு மக்களின் கருத்தை அடிப்படையாக கொண்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும். பிரதமர் நிகழ்ச்சி காலை 11 மணிக்கு தொடங்கும். விசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வீதம் வழங்கப்படும் என மோடி அறிவித்தார். விவசாயிகளுக்கு கொடுக்கும் நிதி தேர்தலுக்கான நிதி என ராகுல் கூறியுள்ளார். இது தேர்தலுக்காக கொடுக்கப்படும் பணம் அல்ல. விவசாயிகளின் நலனுக்காக பாஜ பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. அதில் ஒன்று தான் இது. இதனால் தமிழகத்தில் 70 லட்சம், குமரி மாவட்டத்தில் 80 ஆயிரம் விவசாய குடும்பங்கள் பயன் பெறுவார்கள். நேற்று முன்தினம் இந்த திட்டம் தொடங்கிய உடன் 1 கோடியே 1 லட்சம் ேபருக்கு வங்கியில் பணம் செலுத்தப்பட்டு விட்டது. தேர்தலுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

தமிழகத்தில் நாங்கள் தான் ஏ அணி என கமல் கூறியுள்ளார். சினிமாவில் தான் ஏ சான்றிதழ், யு சான்றிதழ் கொடுக்கப்படும். கமல் எந்த அடிப்படையில் அவரது கூட்டணியை ஏ என கூறினார் என தெரியவில்லை. விஜயகாந்த் எங்களுடன் வருவார் என நம்புகிறேன். வைகோவுக்கு எனது வேண்டுகோள் ஒன்றுதான். பிரதமர் மோடி குமரி மாவட்டத்தில் பல ஆயிரம் கோடிக்கான திட்டங்களை தொடங்கி வைக்க வருகிறார். எனவே அவருக்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்க வேண்டாம் என கோரிக்கையை வைகோ ஏற்றுக்கொள்வார் என நம்புகிறேன். வரும் தேர்தலில் 300க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுடன் பாஜ ஆட்சி அமைக்கும். கூட்டணி கட்சியினர் 50க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் வருவார்கள் என்றார். ேபட்டியின் போது, பாஜ மாவட்ட தலைவர் முத்துகிருஷ்ணன், கோட்ட பொறுப்பளர் கணேசன், நகர்மன்ற முன்னாள் தலைவி மீனாதேவ், மாநில மகளிர் அணி பார்வையாளர் உமாரதி ராஜன், மாவட்ட துணை தலைவர் முத்துராமன், பொருளாளர் உடையார், நகர தலைவர் நாகராஜன், முன்னாள் நகர தலைவர் ராஜன், நிர்வாகிகள் அஜித்குமார், எஸ்.எஸ். மணி உள்பட பலர் உடன் இருந்தனர்.

Tags : Ponnu ,elections ,Interview ,BJP ,Radhakrishnan ,
× RELATED 6ம் கட்ட மக்களவை தேர்தலில் 866...